தஞ்சை சரக துணைபோக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் இருந்து ரூ.2¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை-திருச்சி சாலை, கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மாடியில் தஞ்சை சரக துணைபோக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக நிர்வாகத்தின் கீழ் தஞ்சை, கும்பகோணம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த துணைபோக்குவரத்து அலுவலகத்தில் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை துணை போக்குவரத்து ஆணையருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தொகை வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகி மூலமாக துணை போக்குவரத்து ஆணையருக்கு வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று பொங்கலையொட்டி, துணைபோக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகப்படியான பணம் வழங்கப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.2¾ லட்சம் பறிமுதல்
இதையடுத்து மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் இன்னாசிமுத்து தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஆய்வுக்கூட்டம் முடிந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைவரும் வெளியே வந்தனர். கூட்டத்துக்கு வந்திருந்த தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த உரிமையாளரும் அங்கிருந்து சென்றுகொண்டிருந்தார்.
உடனே சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை ஓட்டுனர் பயிற்சிபள்ளியில் மடக்கிபிடித்தனர். விசாரணையில் அவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கிலிமுத்து (வயது 43) என்பதும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு மாமூலாக வழங்கப்பட்ட ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் பணம் சேகரித்து, துணை போக்குவரத்து ஆணையருக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கிலிமுத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story