பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வதால் பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சேலம்,
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைந்தளவே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனிடையே தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சேலத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கலை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே புறப்பட்டு சென்று வருகின்றனர்.
குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று இரவே ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர். இதனால் சேலம் புதிய பஸ்நிலையம் மற்றும் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே நேற்று இரவு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று முதல் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Related Tags :
Next Story