போகிப்பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கவேண்டாம்


போகிப்பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கவேண்டாம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:00 AM IST (Updated: 12 Jan 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

போகிப்பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் துவாரகநாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப்பண்டிகை கொண்டாடுகிறோம். இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது நம்மிடையே காலந்தொட்டு வரும் ஒரு வழக்கமாகும்.

ஆனால் போகியன்று இன்றைய சூழ்நிலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களையும் எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நச்சுக்காற்றாலும், கரிப்புகையினாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால் புற்றுநோயை விளைவிக்கக்கூடிய டைஆக்சின் மற்றும் பியூரான் என்கிற நச்சுக்காற்று வெளிப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் போகி பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மோகால், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம். பொங்கல் திருநாளை மிக்க மகிழ்ச்சியுடனும் மாசற்ற சுற்றுச்சூழலுடனும் கொண்டாட பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோருகிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் துவாரகநாத் கூறியுள்ளார்.


Next Story