நெல்லையில் குறைந்த பஸ்கள் இயக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது
நெல்லையில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
சம்பள உயர்வு கோரி தொ.மு.ச. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று 8-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 50 முதல் 60 சதவீதம் பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டிருக்கும் டிரைவர், கண்டக்டர்களை கொண்டு நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் நெல்லை மாவட்டத்தில் நேற்று 8-வது நாளாக குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். நெல்லையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலா பஸ்கள், வேன்கள் இயக்கப்பட்டன. பயணிகள் அந்த வாகனங்களில் ஏறி கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.
இதற்கிடையே பொங்கல் விடுமுறையையொட்டி அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களை சென்னையில் இருந்து நெல்லைக்கு அழைத்து வருவதற்காக நேற்று நெல்லையில் இருந்து 20 பஸ்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றன. இதுதவிர சாதாரண பஸ்கள் சிறப்பு பஸ்களாக மாற்றப்பட்டு நேற்று சென்னைக்கு புறப்பட்டு சென்றன. எனவே நெல்லையில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால், பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதையொட்டி அங்கு பந்தல் அமைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தொழிலாளர்களிடம் சம்பள உயர்வு பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மீறி நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதையடுத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், எங்களது வேலை நிறுத்தம் தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோர்ட்டு உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்” என்றனர்.

Related Tags :
Next Story