துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை மனைவி, மகள்களை பிரிந்து வாழ்ந்தவரின் சோக முடிவு
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மகளை பிரிந்து வாழந்த அவர் சோக முடிவை தேடியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்,
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மகளை பிரிந்து வாழந்த அவர் சோக முடிவை தேடியுள்ளார்.
துபாயில் வேலைஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் துபாய் நாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மனைவி, 2 மகள்களையும் அழைத்து கொண்டு தனியாக சென்று விட்டார். பின்னர் முருகன் தனியாக வசித்து வந்தார்.
தூக்கு போட்டு தற்கொலைகடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர், சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் இரவில் பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.