தூத்துக்குடியில் பள்ளி– கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கூடம், கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காமராஜ் கல்லூரி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்ட
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கூடம், கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜ் கல்லூரிதூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்டனர். கல்லூரி சார்பில் கல்லூரி அலுவலகத்தின் முன்புள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலிடப்பட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே கபடி போட்டியும், மாணவிகளிடையே கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் காசிராஜன், பொருளாதார துறை தலைவர் ஜெயராம கிருஷ்ணராஜ், சுயநிதிப்பிரிவு இயக்குனர் டோனி மெல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செந்தூர்பாண்டி, பாலசிங், முரளி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தேவராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
விளையாட்டு போட்டிதூத்துக்குடி அருகே கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் பத்மினி வள்ளி தலைமை தாங்கினார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா முடிவில் மாணவ–மாணவிகள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே வாகைகுளத்தில் உள்ள ராஜலட்சுமி கல்விக் குழுமங்களின் சார்பாக கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்விக் குழுமங்களின் தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜலட்சுமி ஆறுமுக நயினார் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். கல்விக் குழுமங்களின் செயலாளர் ஆறுமுககிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, கல்வி குழுமங்களில் செயற்குழு உறுப்பினர்கள் சுமதி, டாக்டர் ஜெயலலிதா, டாக்டர் சுகன்யா ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.