தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; 4 பேர் படுகாயம்


தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Jan 2018 2:00 AM IST (Updated: 12 Jan 2018 9:43 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி,

தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாமி கும்பிட...

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மாவடிகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மணி என்ற மாரியம்மாள் (வயது 55). இவர் நேற்று தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (40), மாரியம்மாள் (50), அய்யப்பன் (60), மற்றொரு மாரியம்மாள் (38) ஆகிய 4 பேருடன் தென்காசி அருகே புல்லுக்கட்டுவலசையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு ஆட்டோவில் சென்றனர்.

சாமி கும்பிட்டு விட்டு 5 பேரும் அதே ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். ஆட்டோ இலத்தூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.

பெண் பலி

இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணம் செய்த அம்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜெயசீலன் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான அம்மணி உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story