கோபியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் முஸ்லிம்களின் ஹரிஅத் சட்டத்தை திருத்தி முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டம் இயற்றி உள்ளதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடத்தூர்,
கோபி பெரியார் திடலில் முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் மத்திய அரசு பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் முஸ்லிம்களின் ஹரிஅத் சட்டத்தை திருத்தி முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டம் இயற்றி உள்ளதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜமாயுல் கபீர் பள்ளி வாசலின் தலைவர் ஜனாப் தஸ்தகீர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஹபீபுல்லா, ஜியாவுல்ஹக், மவுலானா இல்யாஸ், மவுலானா அன்சர்அலி, மவிலானா அப்பாஸ் ஆகியோர் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் ஜான்பாஷா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story