குளச்சல் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆண் உடல்
குளச்சலில் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் ஆண் உடல் சிக்கியது. எனவே அவர் ஒகி புயலில் சிக்கி இறந்தவரா? என்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி அதிகாலையில் வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி கடலில் மாயமானார்கள். அவர்களில் சிலரது உடல்கள் கேரளாவில் கரை ஒதுங்கின. இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
கேரள கடற்கரையில் கரை ஒதுங்கிய உடல்கள் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், குமரி மாவட்டம் குளச்சல் பகுதி கடலில் மீனவர்கள் விரித்திருந்த வலையில் ஆண் உடல் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
குளச்சலில் இருந்து 11 மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று காலை கரையில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களது வலையில் அழுகிய நிலையில் ஆண் உடல் சிக்கியது. அந்த உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர்.
இறந்தவர் தங்களுக்கு தெரிந்தவரா? என அவர்கள் பார்த்தனர். ஆனால், உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த உடலை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலில் பிணமாக மீட்கப்பட்டவர் மீனவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் ஒகி புயலில் சிக்கி இறந்தவரா? அல்லது புயலுக்கு பின்பு குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது மாயமான 3 மீனவர்களில் ஒருவரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அந்த உடல் அடையாளம் காணப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story