பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் இந்து மக்கள் கட்சியினர் 10 பேர் கைது


பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் இந்து மக்கள் கட்சியினர் 10 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2018 4:52 AM IST (Updated: 13 Jan 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி ரெயில்வே சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி ரெயில்வே சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் 12–ந் தேதி, அந்த கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். அதன்படி மாவட்ட தலைவர் தேவா உள்பட அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடை அருகே நேற்று மதியம் ஒன்று திரண்டனர்.

 இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி இன்ஸபெக்டர்(பொறுப்பு) முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயன்ற கட்சியினரை போலீசார் தடுத்தனர். தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோ‌ஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தேவா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story