ஓட்டு போட பணம் வாங்கினால் ஆயுள்தண்டனை வழங்கக்கோரிய மனு தள்ளுபடி


ஓட்டு போட பணம் வாங்கினால் ஆயுள்தண்டனை வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Jan 2018 5:10 AM IST (Updated: 13 Jan 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வேட்பாளருக்கும், ஓட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கவும், பணம் வாங்குபவர்கள் எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் ஓட்டு போட முடியாதவாறு வாக்காளர் அடையாள அட்டையை பறிமுதல் செய்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் உத்தரவிட்டனர்.


Next Story