உயிரைப் பறிக்கும் உணவு!
அரிசி கேக்கை ரசித்து ருசிப்பதில் ஜப்பானியர்களுக்கு அலாதி ஆர்வம். ஆனால் அந்த உணவே அவர்களின் உயிரைப் பறிக்கும் சோகமும் நிகழ்கிறது.
‘மோச்சி’ எனப்படும் அரிசி கேக்கை ரசித்து ருசிப்பதில் ஜப்பானியர்களுக்கு அலாதி ஆர்வம். ஆனால் அந்த உணவே அவர்களின் உயிரைப் பறிக்கும் சோகமும் நிகழ்கிறது.
சமீபத்திய புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கூட, அரிசி கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டு இரண்டு ஜப்பானியர்கள் இறந்திருக்கிறார்கள், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கேக் எப்படி உயிரைப் பறிக்கும் என்று கேட்கிறீர்களா?
‘பன்’ போன்ற இந்த அழகான, உருண்டையான கேக், மிருதுவான, கோந்து போன்ற அரிசி மாவில் தயாரிக்கப்படுகிறது.
முதலில் அரிசி நீராவியில் வேகவைக்கப்பட்டு, மாவாக பிசையப்படுகிறது. இறுதியில் மோச்சி உருவத்தில் உருட்டப்படுகிறது. அதன்பிறகு தீயில் வாட்டப்பட்டு அல்லது வேகவைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.
ஜப்பானிய குடும்பங் களில் பாரம்பரியமாக புத்தாண்டைக் கொண்டாட காய்கறி சாற்றோடு மோச்சியை சேர்த்து சமைத்துப் பயன்படுத்தப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்த கேக் கோந்து போன்று ஒட்டிக்கொள்ளும் தன்மையுடனும் இருக்கிறது. சாப்பிடும்போது பற்களால் கடிக்கும் அளவைவிட பெரிய அளவில் இருப்பதால் விழுங்குவதற்கு முன்பு நன்றாக பற்களால் அரைக்க வேண்டியிருக் கும்.
அப்படி நன்றாக மெல்ல முடியாத சிறுவர் களுக்கும் முதியோருக்கும் இது உண்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
நன்றாக மெல்லாமல் விழுங்கிவிட்டால், ஒட்டிக்கொள்ளும் தன்மையுடைய இந்த மோச்சி தொண்டையில் ஒட்டிக்கொள்ளும். அது மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும்.
சரி, இந்தக் கேக்கை எப்படித்தான் பாதுகாப்பாக சாப்பிடுவது?
அதற்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாக மென்று விழுங்க வேண்டும் அல்லது இந்த அரிசி கேக்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டிச் சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் கள்.
மோச்சியை உண்பது குறித்து ஒவ் வொரு புத்தாண்டின்போதும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். குறிப்பாக சிறார், சிறுமியரும், முதியோரும் மோச்சியை சிறு துண்டுகளாக வெட்டியே உண்ணவேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
இந்த எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்க, ஒவ்வோர் ஆண்டும் இந்த உணவைச் சாப்பிட்டு இறப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2015 புத்தாண்டில் மோச்சி சாப்பிட்டு 9 பேர் இறந்தனர், 2016 புத்தாண்டின்போது ஒருவரும், பின்னர் மற்றொருவரும் இறந்தனர்.
இவை தவிர, ஒவ்வொரு வருடமும் இந்த அரிசி கேக்கை உணவை உண்ட பலர், கவலைக்கிடமான நிலையில் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story