செங்கோட்டை– புனலூர் அகல ரெயில் பாதையில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
செங்கோட்டை– புனலூர் அகல ரெயில் பாதையில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
செங்கோட்டை,
செங்கோட்டை– புனலூர் அகல ரெயில் பாதையில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
அகல ரெயில் பாதை
தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் ரெயில் சேவையான செங்கோட்டை– புனலூர் இடையோன மீட்டர் கேஜ் பாதை, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பாதையாகும். இதனை அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்காக, ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து, கடந்த 2010–ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் செங்கோட்டை– புனலூர் இடையே மொத்தம் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன.
பழைய குகைகள் பெரிதாக்கப்பட்டும், புதிதாக மேலும் ஒரு குகை பாதையும் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில், நிதி பற்றாக்குறை மற்றும் இயற்கை சீற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டிய பணிகள், 7 ஆண்டுகளாக காலதாமதம் ஆகிவிட்டது.
ரூ.358 கோடி செலவில் முடிக்கப்பட்ட இந்த அகல ரெயில் பாதையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் செங்கோட்டை– கொல்லம் இடையே உள்ள நியூ ஆரியங்காவு முதல் இடமண் வரையிலான அகல ரெயில் பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் டிராலி மூலம் ஆய்வு நடத்தினார்.
அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
நேற்று இந்த இடத்தில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, செங்கோட்டையில் இருந்து சிறப்பு ரெயில் கொண்டு வரப்பட்டு நியூ ஆரியங்காவு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. நியூ ஆரியங்காவு முதல் இடமண் வரையிலும் சென்ற இந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தண்டவாளங்களின் உறுதி தன்மை, ரெயிலின் வேகம் போன்றவை குறித்தும் ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story