சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்குவிலக்கு அளிக்க வேண்டும், தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளித்து பட்டாசு ஆலைகள் முறையாக செயல்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என கூறி உச்சநீதிமன்றத்தில் பட்டாசுக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போதும், அமெரிக்காவில் சுதந்திரதினத்தின்போதும், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போதும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பட்டாசு வெடிப்பதால் நிரந்தர மாசு ஏற்படுவது இல்லை என ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. எனவே பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் பட்டாசுக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக்கொண்டு சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு உண்மைநிலைமைகளை எடுத்துக்கூறி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story