தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; பிரதமர் மீது இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர் மாநாடு பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று பிரதமர் மீது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி பேசினார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது நகர் மாநாடு, தீர்மான விளக்க சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் மகாமுனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட துணைச்செயலாளர் சுப்புக்காளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் பிச்சை மணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் என்றாலே அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் மக்கள் முழுமையாக நம்புகிற மாதிரி குறிப்பிட்ட நாட்களுக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி வாக்குறுதிகளை கூறினார். குறிப்பாக தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் கறுப்பு பணத்தை மீட்போம் என்றார். ஆனால் தேர்தல் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.
இதுகுறித்து கேட்டால், அந்த கட்சியின் நிர்வாகிகள் அவ்வாறு தேர்தல் வாக்குறுதி கொடுக்கவில்லை என்று டி.வி.க்களில் நடைபெறக்கூடிய விவாதங்களில் கூறி வருகிறார்கள். தமிழகத்திற்கு மண்எண்ணெய் குறைவாக வழங்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் ரேஷன் கடையே இல்லாத நிலை ஏற்படும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி இருந்தபோது அன்றாட சிகிச்சை குறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு பதவி அதிகாரத்திற்காக முன்னுக்கு பின்னாக பேசுகிறார்கள். மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக சம்பாதிப்பதை எழுதப்படாத சட்டமாக செயல்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமன், மாநில குழு உறுப்பினர் கந்தசாமி, நகர் குழு உறுப்பினர் குமரகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story