தலைஞாயிறு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்,
தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அம்மா பூங்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அம்மா உடற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தாய் திட்டத்தின் கீழ் ரூ.15.19 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மோட்டார் பம்பு மூலம் நீரேற்றும் அறையின் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளையும், ரூ.20.23 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நாலுவேதபதி புதன் சந்தை சாலை மேம்பாட்டு பணிகளையும், ஈரவாய்க்காலில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இணைப்பு பாலம்
மேலும், வேதாரண்யம் கால்வாயின் குறுக்கே நபார்டு வங்கி நிதியின் கீழ் ரூ.11.38 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தேத்தாக்குடி வடக்கு - புஷ்பவனம் இடையே புதிய பால கட்டுமான பணிகளையும், பிரிஞ்சிமுலை கிராமத்தில் அரிச்சந்திரா நதியின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் இயக்கு அணையின் கட்டுமானபணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், குமரன், செயற்பொறியாளர் குமார், தாசில்தார் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story