ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம், கலெக்டர் உத்தரவை பெற வேண்டும் போலீசார் நிபந்தனை


ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம், கலெக்டர் உத்தரவை பெற வேண்டும் போலீசார் நிபந்தனை
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருமயம், பொன்னமராவதி தாலுகாக்களில் ஜல்லிகட்டை நடத்த நீதிமன்றம் மற்றும் கலெக்டர் உத்தரவை பெற வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் நிபந்தனை விதித்தனர்.

திருமயம்,

திருமயம், பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி அரசிதழில் வெளியிட்ட இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்த கலெக்டரிடம் மனு கொடுத்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை மீறி நடத்்தி சட்ட ஒழுங்கு பிரச்சினை வருவதற்கு வழி வகை செய்ய கூடாது.

அனுமதி

குடியிருப்பு பகுதி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு தரும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைத்்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டுஏற்பாட்டாளர்கள் நீதிமன்றம், கலெக்டர் உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடை பெறும் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக் கப் படும். ஜல்லிக்கட்டானது காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் முடிப்பதோடு போட்டியில், 500காளைகள் மட்டுமே பங்கு பெற அனுமதிக்கப்படும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் விதித்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், கட்சி பிரமுகர்கள், உள்ளூர் பிரபலங்கள், ஊர் தலைவர்கள், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story