நெல்லையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
பொங்கல் திருநாளையொட்டி நெல்லையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
நெல்லை,
பொங்கல் திருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நெல்லையில் இறுதி கட்ட வியாபாரம் களை கட்டியது. நெல்லை டவுன் மார்க்கெட், நான்கு ரதவீதிகள், பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, காய்கறிகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, அச்சுவெல்லம் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
மேலும் வீட்டு முன்பு வண்ண, வண்ண கோலம் போடுவதற்கு வண்ண கோலப்பொடிகளையும் வாங்கிச் சென்றனர். பொங்கல் படி கொடுப்பதற்கு, பாத்திரக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் குவிந்தனர்.
பூ விலை உயர்வு
பொங்கல் திருநாளையொட்டி நெல்லையில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை ஆன மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.2 ஆயிரமாக உயர்ந்தது. அதுவும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்தது. பிச்சி பூவுக்கு கிராக்கி ஏற்பட்டது. அதுவும் ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கலர் பிச்சி பூ ஒரு கிலோ ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,000-க்கும் விற்பனை ஆனது.
இதுதவிர கேந்தி உள்ளிட்ட பூக்களின் விலை வழக்கம் போல் காணப்பட்டது. ஒரு கிலோ கேந்தி பூ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், ஓசூர் மஞ்சள் கேந்தி பூ ரூ.20, அரளி ரூ.150, வாடாமல்லி ரூ.40, கோழி கொண்டைபூ ரூ.40, மரிக்கொழுந்து ரூ.100, ரோஸ் (கலர்) ரூ.250 என்ற அளவில் விற்பனை ஆனது.
பெண்கள் கூட்டம்
நெல்லை சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் வழக்கம் போல் பூக்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். இதுதவிர நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேரடியாக வந்து மல்லிகை, பிச்சி, ரோஸ் உள்ளிட்ட பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் பூ மார்க்கெட் பகுதியில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

Related Tags :
Next Story