‘நீதித்துறையை முடக்க சதி நடக்கிறது’ மத்திய அரசு மீது உத்தவ் தாக்கரே தாக்கு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது 4 நீதிபதிகள் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, நாட்டில் நீதித்துறையை முடக்க சதி நடப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.
மும்பை,
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய் மற்றும் மதன் பி.லோகுர் ஆகியோர் நேற்று முன்தினம் கூட்டாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறிய அவர்கள், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் தழைக்காது என்றும் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில், நீதித்துறையை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது எழுகிற கேள்வி என்னவென்றால், தேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் நிறைவேற்றி விட்டார்களா? என்பது தான். தேர்தல்களில் வெற்றி பெறுவது மட்டும் நிர்வாகம் ஆகிவிடாது. தற்போது, ஆட்சியில் இருப்பவர்களின் அழுத்தத்துக்கு நீதித்துறை உட்பட்டிருக்கிறதோ? என்று தோன்றுகிறது.
தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றம்சாட்டிய 4 நீதிபதிகளின் முடிவும் பாராட்டுக்குரியது. அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. இந்த விசாரணை பாரபட்சமின்றி, நடுநிலையோடு நடைபெற வேண்டும். விசாரணையில், அரசு தலையிட கூடாது. நீதித்துறையை அதன் வேலையை செய்ய விடுங்கள். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மும்பை வருகை பற்றி கேள்வி எழுப்பிய அவர், “சுப்ரீம் கோர்ட்டு தீவிர பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, ஜனாதிபதி இங்கு வருவது ஏன்? மும்பையில் அப்படி என்ன முக்கியமாக நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

Related Tags :
Next Story