வாய்க்காலின் குறுக்கே பாதை அமைத்ததற்கு எதிர்ப்பு: மணல் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்


வாய்க்காலின் குறுக்கே பாதை அமைத்ததற்கு எதிர்ப்பு: மணல் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:28 AM IST (Updated: 14 Jan 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி உள்ளது.

கடலூர்,

காட்டுமன்னார்கோவில் அருகே சி. அரசூரில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செல்லும் வகையில் வெள்ளூரில் உள்ள பாசன வாய்க்காலின் குறுக்கே மண் கொட்டி லாரிகள் சென்று வர தற்காலிக சாலையை பொதுப்பணித்துறையினர் அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது, பெய்த மழைக்கு இந்த வாய்க்கால் கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் வாய்க்காலில் பாதை அமைக்கப்பட்டு இருப்பதால், தேங்கிய நீரை வாய்க்காலில் வடிய வைக்க முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று முன்தினம் இந்த வழியாக சென்ற மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் சி.அரசூர் மணல் குவாரிக்கு மணல் அள்ள சென்ற ஒரு டிராக்டரை ஒருவர் வழிமறித்து தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டார். டிரைவர் தர மறுத்ததால், அவரை அந்த நபர் தாக்கினார். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story