சேலத்தில் சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

சூரமங்கலம்,
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் நேதாஜி நகரில் 30–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். அவர்களுடைய போக்குவரத்து வசதிக்கு, 14 அடி அகல சாலை உள்ளது. அங்கு பாதாள சாக்கடைப்பணிகள் சமீபத்தில் முடிந்தது. தற்போது அதேபகுதியை சேர்ந்த ஒருவர், 14 அடி அகல சாலை தங்களுக்கு சொந்தம் என்றும், இதனால் அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சூரமங்கலம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அறிந்த அந்த நபர் மரம், கற்களை போட்டு சம்பந்தப்பட்ட சாலையை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆவேசம் அடைந்த 30–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இத்த்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story