மாவட்ட செய்திகள்

கூரை வீட்டில் திடீர் தீவிபத்து + "||" + The roof of the house is sudden fire

கூரை வீட்டில் திடீர் தீவிபத்து

கூரை வீட்டில் திடீர் தீவிபத்து
கூரை வீட்டில் திடீர் தீவிபத்து
வாணாபுரம்,

வாணாபுரம் அருகே வாழவச்சனூர் வள்ளுவர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தரணி (வயது 50), விவசாய கூலித்தொழிலாளியான இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தரணி வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றிருந்தார். திடீரென அவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.


அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அங்கு வந்த தண்டராம்பட்டு தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். எனினும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.