மாவட்ட செய்திகள்

காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு + "||" + Sucking a beloved girlfriend and trying to marry with another woman is a case against 6 people including a young man

காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு

காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ரூ.3 லட்சம் வரதட்சணை தராததால் காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு முயற்சி வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சோனியாவும் (வயது 20), எதிர்வீட்டை சேர்ந்த தேவேந்திரன் மகன் தினேஷ்குமாரும் (25) காதலித்து வந்தனர். கடந்த வருடம் சோனியா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த தினேஷ்குமார் அங்கு சென்று ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்காக பெற்றோர் அதே ஊரில் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி அது குறித்து தினேஷ்குமாரிடம் கேட்டார். அப்போது ரூ.3 லட்சம் வரதட்சணை தந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.


நியாயம் கேட்க சென்ற சோனியாவின் பெற்றோரை தினேஷ்குமார், அவரது பெற்றோர்கள், சோனியாவின் பெற்றோர்களை அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் தினேஷ்குமார், அவரது பெற்றோர் தேவேந்திரன், ராணி மற்றும் பெரியம்மா ராணி, பெண் கொடுக்க முயன்ற ரவி, அவரது மனைவி கலா ஆகிய 6 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.