மாவட்ட செய்திகள்

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரி உள்ளாட்சி ஊழியர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் + "||" + Local community staff hunger strike

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரி உள்ளாட்சி ஊழியர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரி உள்ளாட்சி ஊழியர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரி உள்ளாட்சி ஊழியர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காரைக்கால்,

புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி காரைக்கால் நகராட்சி மற்றும் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி, திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 3-ந் தேதி முதல் காரைக்காலில் உள்ள உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில், நாளை (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து காரைப்பிரதேச அரசு ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் நிருபர்களிடம் கூறுகையில், ‘உள்ளாட்சி ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குரிய அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையிலும், அரசாணை பிறப்பிக்க புதுச்சேரி அரசு காலதாமதம் செய்வது முறையற்ற செயலாகும். கடந்த 9 நாட்களாக தொடர் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் நாளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இனியும் அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டால் எங்களது வேலைநிறுத்த போராட்டம் தொடரும்’ என்றார்.