அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Jan 2018 4:04 AM IST (Updated: 16 Jan 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசு ஆணைகளின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல சுதந்திர தணிக்கை குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story