தை அமாவாசையையொட்டி காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டது.
ஸ்ரீரங்கம்,
நமது குடும்பத்தில் இறந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு அவர்களது இறந்த தினம் அல்லது அதற்குரிய நட்சத்திரத்தையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற முக்கியமான தினங்களில் நமது முன்னோர்கள் பித்ருக்கள் உலகத்தில் இருந்து பூலோகத்திற்கு பசியுடன் வருவார்கள் என்பதால் அந்த நேரங்களில் அவர்களது வாரிசுகள் எள் உள்ளிட்ட பொருட்களால் தர்ப்பணம் செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது ஐதீகம். மேலும் வருட திதி கொடுக்க தவறியவர்கள் தை அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்தால் அந்த வருடம் முழுவதற்கும் தர்ப்பணம் செய்ததற்கு சமமான பலன் கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தை அமாவாசையான நேற்று அதிகாலை திருச்சி காவிரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே ஏராளமானவர்கள் வந்து விட்டனர். அவர்கள் காவிரியில் புனித நீராடினர், பின்னர் எள், அருகம்புல், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் அங்குள்ள புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் செய்தனர். சிலர் பிண்டங்களை வடிவமைத்து அவற்றிற்கு படையல் போட்டு பின்னர் அதனை ஆற்றில் மிதக்க விட்டனர்.அம்மா மண்டபம் சாலையில் இதற்காக காலை முதல் மதியம் வரை ஏராளமான புரோகிதர்கள் குழுமி இருந்தனர். இதன் காரணமாக அம்மா மண்டபம் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது. இதே போல் அய்யாளம்மன் படித்துறை, தில்லை விநாயகம் படித்துறைகளிலும் ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Related Tags :
Next Story