பொங்கலை முன்னிட்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன
காணும் பொங்கலை முன்னிட்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். வீட்டில் பொங்கலிட்டு இறை வனுக்கு படைத்தனர். சிலர் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ரஞ்சன்குடிக்கோட்டை, கல் மரப்பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். இதேபோல் காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அந்தந்த தெரு சிறுவர், சிறுமியர், வாலிபர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப் படுத்தினர்.
இள வட்டக்கல்லை தூக்குதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கபடி உள்ளிட்ட போட்டிகள் வாலிபர்களுக்காக நடத்தப்பட்டன. கோலப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல், ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகள் இளம்பெண்களுக்கு நடத்தப்பட்டன. சாக்குபோட்டி, ஸ்பூனில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடுதல், ஓட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட எளிதான போட்டிகள் சிறுவர்-சிறுமிகளுக்காக நடத்தப்பட்டன. மேலும் மாலையில் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த நற்பணி மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர், குரும்பலூர், வேப்பந்தட்டை, மங்களமேடு, திருமாந்துறை, அத்தியூர், ஒகளூர், கீழப்பெரம்பலூர் உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஊரின் பொது இடத்தில் மாவிலை தோரணங்கள், கொடி கட்டப்பட்டு இருந்தன. மேலும் கலர் கோலங்கள் போடப்பட்டு இருந்தன. இங்கு ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் கபடி, சைக்கிள் போட்டி, கோ-கோ உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி சுற்று வட்டார பகுதிகளான காத்தான்குடிகாடு, தேளூர், குடிசல், விளாங்குடி, ரெட்டிபாளையம், ஓரத்தூர், முனியங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங் களில் காணும் பொங்கலை பொதுமக்கள் கொண்டாடினர். இதையொட்டி காலை முதல் மாலை வரை கபடி, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், ஓட்டப்பந்தயம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறுவர்-சிறுமிகள், வாலிபர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து பெண்களுக்கான கும்மியடித்தல், கோ-கோ, கயிறு இழுத்தல் மற்றும் கோலப்போட்டிகளும் நடை பெற்றன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story