தேசிய தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

பெரம்பலூர்,
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்திய 63-வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் அரியானா மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்றது. போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள மாணவிகள் 3 பேர் தமிழ்நாடு அணி சார்பாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். 19 வயதிற்குட்பட்ட மும்முறை தாண்டுதல் போட்டியில் நாகபிரியா வெண்கல பதக்கமும், பவானி 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் ஆறாமிடமும், கிருத்திகா 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஆறாமிடமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற நாகபிரியாவிற்கு தமிழக அரசு சார்பாக ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநில அளவிலான ரிலையன்ஸ் பவுண்டேசன் இளையோர் தடகள போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜனவரி 8-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற்றது. பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றனர். மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகள் மாவட்ட கலெக்டர் சாந்தாவை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது பேசிய மாவட்ட கலெக்டர், தேசிய அளவிலும், மாநில அளவிலுமான போட்டிகளில் வெற்றிபெற்று நமது நாட்டிற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன், மேலும், பல்வேறு சாதனைகளை படைக்க உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா, தடகள பயிற்றுனர் கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story