நடிகர் பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு கோமியத்தால் தூய்மை செய்த பா.ஜனதாவினரால் பரபரப்பு


நடிகர் பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு கோமியத்தால் தூய்மை செய்த பா.ஜனதாவினரால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 2:30 AM IST (Updated: 17 Jan 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசிய மேடையை மாட்டு கோமியத்தால் தூய்மை செய்த பா.ஜனதாவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசிய மேடையை மாட்டு கோமியத்தால் தூய்மை செய்த பா.ஜனதாவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோமியத்தால் தூய்மை...


நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக மத்திய பா.ஜனதா அரசு மற்றும் அக்கட்சிக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார். மதவாத அரசியலை அவர் கடுமையாக எதிர்க்கிறார். பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் அடிக்கடி தனது கருத்தை பதிவு செய்கிறார். இப்போது அவர் பல பகுதிகளுக்கு சென்று பேசவும் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் கார்வார் மாவட்டம் சிர்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு திருமண மேடையில் நின்று பேசினார். அப்போது அவர், பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசிய அந்த திருமண மண்டபத்தின் மேடையில் பா.ஜனதாவினர் நேற்று மாட்டு கோமியம் தெளித்து தூய்மை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புனிதம் கெட்டுவிட்டது

இதுபற்றி நிருபர்களிடம் பேசிய பா.ஜனதாவினர், “சிர்சி பகுதி மிகவும் புனிதமானது. ஆனால் சில தீயசக்திகள் இங்கு வந்து பேசிவிட்டு சென்றுள்ளனர். அதனால் சிர்சியின் புனிதம் கெட்டுவிட்டது. அதை சரிசெய்யவே இந்த திருமண மண்டபத்தில் நாங்கள் மாட்டு கோமியம் தெளித்து தூய்மை செய்தோம்“ என்றனர்.

இதை அறிந்து கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், “நான் செல்லும் இடமெல்லாம் இதுபோல் மாட்டு கோமியத்தை தெளித்து தூய்மைபடுத்தும் சேவையை பா.ஜனதாவினர் செய்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story