பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
ஆலங்குடி அருகே பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை பொங்கல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், காரைக்குடி, திண்டுக்கல் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 328 காளைகள், வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன.
இதில் காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயடைந்த 2 பேர் மேல்சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டை ஆலங்குடி, வன்னியன்விடுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிப் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story