காணும் பொங்கலையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி உலக புகழ் பெற்ற சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
நார்த்தாமலை,
அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் புகழ்பெற்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு காணும் பொங்கல் மற்றும் அரசு பள்ளிகள், அலுவலகங்களின் தொடர் விடு முறையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலத்திற்கு மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.
சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமைந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு களித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்கல்கள், மான், யானை சிலைகள் போன்றவற்றில் விளையாடியும் கை பேசி, கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும், விளையாட்டு பொருட்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
பயணிகள் கோரிக்கை
மேலும் சித்தன்னவாசல் வந்த சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறும், படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்த னர். தொடர்ந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை மற்றும் திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் செய்திருந்தனர். சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மழை, வெயில் காலங்களில் அமர்வதற்கும் மற்றும் அமர்ந்து உணவு உண்பதற்கும் வசதியாக தகர கொட்டைகள் அல்லது நிழற்குடைகள் போல் கட்டிட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், இது போன்ற பண்டிகை காலங்களில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே சுற்றுலா தலத்திற்கு வருவதற்கு பஸ் வசதியும் செய்து தர வேண்டும் என அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story