கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா

x
தினத்தந்தி 17 Jan 2018 4:00 AM IST (Updated: 17 Jan 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக தெப்பக்குளம் அமைந்துள்ளது.

கங்கா-நர்மதா-ஸம்யுக்த ஸ்ரீநரசிம்ம புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தெப்பக்குளம் பழுதடைந்து காணப்பட்டது. தற்போது இத்திருக்குளத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை புனிதப்படுத்தும் பூஜையாக நரசிம்ம புஷ்கரணிக்கு, தடாக பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நாளை(வியாழக்கிழமை) மாலை 5.30 மணி முதல் நித்யலாராதனம், யஜமான-ஆச்சாரிய வரணம், புண்யாஹவாசனம், பகவத் ப்ராத்தனா, ம்ருத்ஸங்கிரகணம், அங்குரார்ப்பணம், பிரதீசர ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப ஆவாஹணம், கும்ப ரஷ்பந்தனம், பிரதான உக்த ஹோமங்கள், நைவேத்யம் நடக்கிறது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் பிரதான உக்த ஹோமங்கள், வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கங்கா-நர்மதா-ஸம்யுக்த ஸ்ரீநரசிம்ம புஷ்கரணிக்கு அனைத்து விதமான அபிசேகங்கள், கும்ப தீர்த்தத்தை திருக்குளத்தினுள் சேர்த்தல், தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 10.04 முதல் 10.24-க்குள் திருக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்தல், கும்ப ஜபம், கும்பம் எழுந்திருத்தல், வேங்கடாசலபதி மற்றும் நரசிம்மருக்கு தீர்த்தம் சமர்ப்பித்தல், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தீர்த்த வலம் வந்து பூஜைகள் நடைபெறுகிறது. விழாவில் பிரபாகரன் எம்.பி., செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, தக்கார் சங்கர், தென்காசி தெற்கு ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபா நிறுவனர் சீனிவாச வெங்கடாசலம், கோவில் அர்ச்சகர் ஆனந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.ள்ளப்பட்டது. அதனை புனிதப்படுத்தும் பூஜையாக நரசிம்ம புஷ்கரணிக்கு, தடாக பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நாளை(வியாழக்கிழமை) மாலை 5.30 மணி முதல் நித்யலாராதனம், யஜமான-ஆச்சாரிய வரணம், புண்யாஹவாசனம், பகவத் ப்ராத்தனா, ம்ருத்ஸங்கிரகணம், அங்குரார்ப்பணம், பிரதீசர ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப ஆவாஹணம், கும்ப ரஷ்பந்தனம், பிரதான உக்த ஹோமங்கள், நைவேத்யம் நடக்கிறது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் பிரதான உக்த ஹோமங்கள், வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கங்கா-நர்மதா-ஸம்யுக்த ஸ்ரீநரசிம்ம புஷ்கரணிக்கு அனைத்து விதமான அபிசேகங்கள், கும்ப தீர்த்தத்தை திருக்குளத்தினுள் சேர்த்தல், தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 10.04 முதல் 10.24-க்குள் திருக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்தல், கும்ப ஜபம், கும்பம் எழுந்திருத்தல், வேங்கடாசலபதி மற்றும் நரசிம்மருக்கு தீர்த்தம் சமர்ப்பித்தல், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தீர்த்த வலம் வந்து பூஜைகள் நடைபெறுகிறது. விழாவில் பிரபாகரன் எம்.பி., செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, தக்கார் சங்கர், தென்காசி தெற்கு ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபா நிறுவனர் சீனிவாச வெங்கடாசலம், கோவில் அர்ச்சகர் ஆனந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story