தை அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


தை அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 17 Jan 2018 4:15 AM IST (Updated: 17 Jan 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் திரளானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

குளித்தலை,

அமாவாசை தினங்களில் தாய், தந்தையை இழந்தவர்கள் அவர்களின் வீடுகளில் விரதம் இருந்து தாய், தந்தை மற்றும் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். இதில் தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசைகளில் ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அதிலும் காசிக்கும், கங்கைக்கு அடுத்தபடியாக உள்ள காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்வதை மிகவும் சிறப்பானதாக கருதுகிறார்கள். இந்த நிலையில் மிகமுக்கிய அமாவாசைகளில் ஒன்றாக கருதப்படும் தை அமாவாசையான நேற்று அதிகாலை முதலே குளித்தலையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளானோர் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர்.

அங்கு புனித நீராடி ஆங்காங்கே அமர்ந்திருந்த புரோகி தர்களிடம் சென்று தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், தங்களுக்கு எல்லா நன்மைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்று வேண்டி தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் அதை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இதையடுத்து கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று கடம்பவனேசுவரரை வழிபட்டு சென்றனர்.

இதேபோல் கரூர் நெரூர் காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரா கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 

Next Story