மகதாயி நதி கர்நாடகத்தின் உரிமை மந்திரி எம்.பி. பட்டீல் கருத்து
மகதாயி நதி கர்நாடகத்தின் உரிமை என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
பெங்களூரு,
மகதாயி நதி கர்நாடகத்தின் உரிமை என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
குடிநீர் தேவைக்கு தண்ணீர்
மகதாயி நதிநீர் பங்கீடு தொடர்பாக மராட்டியம், கோவா, கர்நாடக மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கோவா முதல்-மந்திரி கடிதம் எழுதினார். சட்டசபை தேர்தலில் மக்களை கவர பா.ஜனதா நடத்திய மிகப்பெரிய நாடகம் என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டினார்.
கோவா முதல்-மந்திரியின் முடிவுக்கு அந்த மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி வினோத் பாலேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவா முதல்-மந்திரி தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கனகும்பே பகுதியில் கோவா நீர்ப்பாசனத்துறை மந்திரி வினோத் பாலேகர் ஆய்வு செய்தார். அங்கு கலசா-பண்டூரி கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, கன்னடர்கள் தரக்குறைவாக பேசினார். இதற்கு கர்நாடக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நாங்கள் பிச்சை கேட்கவில்லை
இந்த நிலையில் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மகதாயி நதி கர்நாடகத்தின் உரிமை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களை கிளறிவிட வேண்டாம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்களின் உரிமை கண்டிப்பாக கிடைக்கும். எங்கள் மாநிலத்தை காக்கும் பாடத்தை உங்களிடம்(கோவா மந்திரி வினோத் பாலேகர்) இருந்து கற்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்களை போன்று ஆயிரம் பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. மகதாயி எங்கள் உரிமை. அதை பெற்றே தீருவோம். எங்கள் மாநில மக்களை பற்றி தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும். தவறாக பேசியதற்காக மந்திரி வினோத் பாலேகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story