கோவில்பட்டி அருகேஆம்னி பஸ் மோதி காவலாளி சாவு
கோவில்பட்டி அருகே ஆம்னி பஸ் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசெவல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 62). இவர் நாலாட்டின்புத்தூர் அருகில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவில் அவர் சைக்கிளில் கல்லூரிக்கு இரவு நேர பணிக்கு புறப்பட்டு சென்றார். பெருமாள்சாமி இடைசெவல் பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக பெருமாள்சாமியின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த பெருமாள்சாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பஸ் டிரைவரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைகுன்றைச் சேர்ந்த பாண்டியராஜனை கைது செய்தனர்.

Related Tags :
Next Story