உலகைச்சுற்றி
* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று தனது மகள் மர்யம், மருமகன் சப்தார் ஆகியோருடன் இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் 13-வது முறையாக ஆஜர் ஆனார்.
* தலீபான் அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் முல்லா பஸ்லுல்லாவின் மாமனாரும், அந்த இயக்கத்தின் தளபதிகளில் ஒருவருமான முகமது (வயது 93) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தலீபான் இயக்கத்தின் தந்தை என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.
* பாகிஸ்தானில் ஜைனப் என்ற சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தை, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன் வந்து வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சிறுமியின் மரணத்தால் ஒட்டுமொத்த தேசமும் துக்கத்தில் ஆழ்ந்து உள்ளதாக தலைமை நீதிபதி சாகிப் நிசார் குறிப்பிட்டார்.
* தஞ்சம் அடைந்து உள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரையும் 2 ஆண்டுகளில் மியான்மருக்கு அனுப்பி வைக்க அந்த நாட்டு அரசுக்கும், வங்காளதேச அரசுக்கும் இடையேயான பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.
* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற சிரியாவில் கடந்த 2 வாரங்களில் நடந்த சம்பவங்களில், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் கூறி உள்ளது.
Related Tags :
Next Story