விவசாயி சுட்டுக்கொலை: கணவன்-மனைவி கைது பரபரப்பு வாக்குமூலம்
பென்னாகரம் அருகே விவசாயி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடுப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு என்கிற சின்னதம்பி (வயது 40), விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த 13-ந்தேதி கோடுப்பட்டி வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் கோடுப்பட்டி வனப்பகுதி நானாகுட்டப்பள்ளம் பகுதியில் சேட்டு உடலில் குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் சேட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கோடுப்பட்டியை சேர்ந்த விவசாயியான குப்பன், அவருடைய மனைவி மகாலட்சுமி ஆகிய 2 பேரும் பவளந்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரியிடம் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அவர் பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தார். அப்போது குப்பன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
விவசாயி சேட்டுக்கும், மகாலட்சுமிக்கும் கடந்த 6 மாதமாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த விவகாரம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குப்பனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். கடந்த 13-ந்தேதி மகாலட்சுமி தோட்டத்தில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை கவனித்த குப்பன் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது சேட்டுடன் பேசியது தெரியவந்தது.
இதையடுத்து மனைவி மூலம் சேட்டுவை வரவழைத்து கொலை செய்ய குப்பன் முடிவு செய்தார். மேலும் மனைவியிடம் சேட்டுவை வனப்பகுதிக்கு வர சொல்லுமாறு மிரட்டி உள்ளார். அவர் கணவருக்கு பயந்து சேட்டுவை வழக்கம் போல் சந்திக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சேட்டு நானாகுட்டப்பள்ளம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த குப்பன் நாட்டுத்துப்பாக்கியால் 3 முறை சேட்டுவை சுட்டும், தலையில் கல்லால் சரமாரியாக தாக்கியும் கொலை செய்துள்ளார்.
சேட்டு கொலை வழக்கில் போலீசார் கொலையாளியை தேடுவதை அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலரிடம் குப்பன், மனைவியுடன் சென்று சரண் அடைந்து விட்டதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயி குப்பன்(41), கள்ளக்காதலி மகாலட்சுமி (37) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி மற்றும் குப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மற்றொரு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story