“ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு சிறு தீங்கும் விளைவிப்பது இல்லை” முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
“ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு சிறு தீங்கும் விளைவிப்பது இல்லை என்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை,
மதுரை அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.யுமான ராஜன்செல்லப்பா ஆகியோர் வரவேற்றனர். விழாவுக்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டு மூலம் காளைகளுக்கு சிறு தீங்கும் விளைவிப்பது இல்லை. காளை வளர்ப்பவர்கள் குழந்தைகளை நாம் எப்படி பேணி வளர்ப்போமோ அதுபோல தங்கள் வீட்டு குழந்தைகளை போல வளர்க்கிறார்கள். வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பேணிக் காப்பது நமது அனைவரின் கடமையாகும். வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு உலகமே போற்றும் அளவுக்கு சிறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கு பல்வேறு தடைகள் இருந்தாலும் அதனை உடைத்து சட்டப்போராட்டம் நடத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது தடைகளை தகர்த்தெறிந்து தமிழக மக்கள் வியக்கும் வண்ணம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பாரம்பரியம் மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த இந்த அரசு துணையாக இருக்கும். வீரர்கள் கவனமாகவும், திறமையாகவும் செயல்பட்டு காளைகளை அடக்க வேண்டும். உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்தி வரும் அலங்காநல்லூர் கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தரமாக மைதானம் அமைக்க விழாக்கமிட்டி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எனவே நிரந்தர மைதானம் அமைப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர். அதனை திரும்பக்கூறி மாடு பிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக ஜல்லிக்கட்டு விழாவை முதல்-அமைச்சர் கண்டு ரசித்தார். பின்னர் அவர் அலங்காநல்லூரில் உள்ள முத்துராமலிங்கத்தேவர், தீரன்சின்னமலை ஆகியோரின் சிலைகளுக்கும், மேலசின்னனம்பட்டி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Related Tags :
Next Story