தென்மாவட்டங்களுக்கான இருவழி ரெயில்பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை, நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை
வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கான இருவழி ரெயில் பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதீய ஜனதா அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 ரெயில்வே பட்ஜெட்டுகளிலும் தென்மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. அதிலும் தமிழகத்திற்கு புதியதிட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. தமிழக ரெயில்வே திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரெயில்வே திட்டங்கள் தாமதத்துக்கு உள்ளாகும் நிலையும், முடக்கம் அடைந்துள்ள நிலையும் இருந்து வருகிறது. தற்போது ரெயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டுவிட்டது. வரும் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மதுரை இடையேயான இருவழி ரெயில் பாதை அமைக்கும் பணி பெரும் பகுதி நிறைவடைந்து விட்டாலும் சில இடங்களில் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. இதற்கிடையில் மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இருவழி ரெயில் பாதை அமைக்க மத்திய மந்திரிசபைஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையிலான 102 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையை ரூ.1,004 கோடி மதிப்பீட்டில் இருவழி ரெயில் பாதையாக மாற்றவும், கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான 86.5 கிலோ மீட்டர் ரெயில் பாதையை ரூ.1,431 கோடி மதிப்பீட்டில் இருவழி ரெயில்பாதையாக்கவும், மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடி வரையிலான 160 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையை ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் இருவழி ரெயில்பாதையாக மாற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் அனைத்துமே 2021-ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவை பொருத்து தான் திட்டப்பணிகள் 4 ஆண்டுகளுக்குள் முடிவடைய வாய்ப்பு ஏற்படும். தற்போது உள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக அழுத்தம் தரப்பட்டு வரும் நிலையில் இருவழி ரெயில்பாதை அமைக்கப்பட்டால் தான் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக நாகர்கோவில் வரையிலான இருவழி ரெயில்பாதைக்கு முன்னுரிமை கொடுத்து திட்டப்பணியை தொடங்க வேண்டும். அதிலும் குறிப்பாக முதல் கட்டமாக மதுரை-விருதுநகர் இடையே இருவழி ரெயில்பாதை திட்டப்பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்பட்டால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் நெடுந்தூர ரெயில்கள் தாமதம் இன்றி செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் விருதுநகர்-மதுரை இடையே தான் நெடுந்தூர ரெயில்கள் எதிரே வரும் ரெயில்களுக்காக தாமதப்படுத்தப்படும் நிலை இருந்து வருகிறது.
தென்மாவட்டங்களுக்கான இருவழி ரெயில் பாதைக்கு கிட்டதட்ட ரூ.3,700 கோடி நிதி தேவைப்படும் நிலையில் வரும் 2021-ம் ஆண்டிற்குள் திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்த பட்சம் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனவே மத்திய நிதி அமைச்சகம் வரும் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில் இந்த இருவழி ரெயில்பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று மதுரை-போடி இடையேயான ரெயில்பாதை திட்டத்திற்கும் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.25 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இத்திட்டப்பணியை முழுவீச்சில் மேற்கொள்ள வரும் நிதியாண்டிலாவது முழு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக தூத்துக்குடி வரையிலான 140 கிலோ மீட்டர் தூர அகல ரெயில்பாதை திட்டத்துக்கு இதுவரை மிக குறைந்த அளவிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்ட மதிப்பீடு ரூ.800 கோடி என கூறப்பட்ட நிலையில் தற்போது திட்ட மதிப்பீடு அதை விட கூடுதலாக வாய்ப்பு உள்ள நிலையில் இத்திட்டப்பணிக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
மத்திய பட்ஜெட் தாக்கலாவதற்கு முன்பாக ரெயில்வே பொதுமேலாளர், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள், வியாபார தொழில் துறை சங்க பிரதிநிதிகளை அழைத்து தமிழகத்தில் ரெயில் போக்குவரத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதனை நிதி அமைச்சகத்துக்கும், ரெயில்வே அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக எம்.பி.க்கள் தென்மாவட்டங்களுக்கான இருவழி ரெயில்பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என மத்திய நிதி மந்திரியிடமும், ரெயில்வேத்துறை மந்திரியிடமும் வலியுறுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

Related Tags :
Next Story