புனே அருகே பயங்கரம் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது
புனே அருகே போலீஸ் ஏட்டு 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
புனே,

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
போலீஸ் ஏட்டு
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாவந்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர், சஞ்சய் ஷிண்டே. இவர் நேற்று தாவந்தில் உள்ள நகர் மோரி பகுதியில் திடீரென ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அந்த நபரை துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால், நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
இதைத்தொடர்ந்து, போரவாகி பகுதிக்கு சென்ற போலீஸ் ஏட்டு சஞ்சய் ஷிண்டே, அங்கு மேலும் இருவரை கண்மூடித்தனமாக சுட்டார். இதனால், அவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில், அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அரங்கேறிய இந்த சம்பவத்தால், பொதுமக்கள் பதை பதைப்பில் ஆழ்ந்தனர்.
முன்விரோதம்
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த சஞ்சய் ஷிண்டே, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், பலியான 3 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்களது பெயர் கோபால் ஷிண்டே, பிரசாந்த் பவார் மற்றும் அனில் ஜாதவ் என்பது தெரியவந்தது.
இதனிடையே, வீட்டுக்குள் பதுங்கி இருந்த சஞ்சய் ஷிண்டேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், கோபால் ஷிண்டே அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த பயங்கர சம்பவத்தை அவர் அரங்கேற்றியதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story