ரெயில்வே போலீசாரின் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் பயணிகள் பொய் புகார் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை
பயணிகள் பொய் புகார் கொடுப்பதை தடுக்க ரெயில்வே போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்த மேற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
மும்பை,

சீருடையில் கேமரா
ரெயில்வே போலீசார் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் அதிகளவில் வருகின்றன. இதேபோல ரெயில்வே போலீசார் மீது பயணிகள் பொய் புகார் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ரெயில்வே போலீசாரின் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்த மேற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி சிறிய ரக கேமரா ஒன்று ரெயில்வே போலீசாரின் சீருடையில் மார்பு பகுதியில் பொருத்தப்படும். இதில் பதிவாகும் காட்சிகள், ஆடியோவுடன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள சர்வரில் பதிவாகும். இதன் மூலம் ரெயில்வே போலீசார் தவறு செய்யும் சம்பவங்களும், ரெயில்வே போலீசார் மீது பயணிகள் பொய்யான புகார் அளிப்பதும் தடுக்கப்படும். இதேபோல குற்றச்சம்பவங்களில் இதில் பதிவாகும் காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக இருக்கும்.
பிப்ரவரிக்குள் வாங்கப்படும்
இதுகுறித்து மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பாய்கர் கூறுகையில், “முதல் கட்டமாக போலீசாரின் சீருடையில் பொருத்தும் வகையிலான 8 கேமராக்களை வாங்க உள்ளோம். இந்த கேமராக்கள் ஆமதாபாத்- டெல்லி ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரெயில்வே போலீசாரின் சீருடையில் பொருத்தப்படும். பிப்ரவரிக்குள் எல்லா கோட்டங்களுக்கும் இந்த கேமராக்கள் வாங்கப்படும்”.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே போலீசாரின் சீருடையில் பொருத்த வாங்கப்பட உள்ள ஒரு கேமராவின் விலை ரூ.38 ஆயிரம் ஆகும்.

Related Tags :
Next Story