காட்கோபரில் 3 வயது சிறுவனை கடத்த முயன்ற தொழிலாளி கைது
காட்கோபரில் 3 வயது சிறுவனை கடத்த முயன்ற சுமை தூக்கும் தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை,

சிறுவன் கடத்தல்
மும்பை காட்கோபர் கிழக்கு அசல்பா பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மகன் விராஜ்(வயது 3). சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் நாரிசேவாசதன் ரோட்டில் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பார்க்க ஆதித்யா தனது மகன் விராஜூடன் அங்கு வந்தார். அப்போது அருகே நின்றுகொண்டிருந்த அவரது மகன் விராஜ் கூட்ட நெரிசலில் திடீரென காணாமல் போய் விட்டான். இதனால் பதற்றம் அடைந்த அவர் மகனை தேடி அலைந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது மகனை கடத்தி கொண்டு சாலையின் எதிர்புறம் வேகமாக செல்வதை பார்த்தார். உடனே அவர் மகனை கடத்தி சென்றவரை பிடிக்கும்படி கூச்சல் போட்டார்.
தொழிலாளி கைது
ஆதித்யாவின் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் சிறுவனை கடத்தி சென்ற நபரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த சிறுவன் விராஜை மீட்டனர். பின்னர் பொதுமக்கள் சிறுவனை கடத்த முயன்ற நபரை காட்கோபர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சிறுவனை கடத்த முயன்றவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நாதுராம்(25) என்பதும், ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் சிறுவனை ஏன் கடத்தி செல்ல முயன்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story