குள்ளஞ்சாவடி அருகே நடந்து சென்ற 2 பேர் மீது தாக்குதல் காலனி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு


குள்ளஞ்சாவடி அருகே நடந்து சென்ற 2 பேர் மீது தாக்குதல் காலனி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 3:53 AM IST (Updated: 17 Jan 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

குள்ளஞ்சாவடி டி.பாளையம் காலனியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்.

கடலூர்,

குள்ளஞ்சாவடி அருகே உள்ள டி.பாளையம் காலனியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்(வயது 34). இறையண்பு(33). இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் தம்பிபேட்டையில் இருந்து டி.பாளையம் கிராமம் வழியாக காலனிக்கு நடந்து சென்றனர். அப்போது டி.பாளையம் கிராமத்தை சேர்ந்த 5 பேர், அவர்களை தாக்கினர். இதில் காயமடைந்த 2 பேரும், தங்களது ஊருக்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர்.

 இதையடுத்து காலனி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனால் காலனி மக்கள் கடலூர்–விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு காலனி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இந்த சம்பவம் தொடர்பாக டி.பாளையம் கிராமத்திலும், காலனியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story