லாரி-கார் மோதல்; காய்கறி வியாபாரி பலி மனைவி உள்பட 5 பேர் காயம்
தர்மபுரி அருகே லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார். அவருடைய மனைவி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 64) காய்கறி வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு காரில் சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு ஊருக்கு புறப்பட்டார்.
நேற்று அதிகாலை தர்மபுரி அருகே உள்ள மாட்டுக்காரன்கொட்டாய் பகுதியில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இவர்கள் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேர் காயம்
காரில் வந்த வரதராஜனின் மனைவி சண்முகவள்ளி (60), மகள் ஜெயந்தி, மருமகன் குமார், பேரன் நவீன், கார் டிரைவர் சிவக்குமார் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரிடவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த 5 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story