மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி அணையின் நீர்மட்டம் குறைந்தது, மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, போர்த்திமந்து, பார்சன்ஸ் வேலி, பைக்காரா, முக்குருத்தி, சாண்டி நல்லா உள்ளிட்ட 12 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பைக்காரா உள்ளிட்ட மின் நிலையங்களில் தினசரி 834 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்தி செய்யப்பட்டு மீதி உபரியாக செல்லும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி மற்றும் பவானி வழியாக விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அங்கு பெய்யும் பருவமழையே முக்கிய காரணமாகும். ஆனால் கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பருவமழை ஓரளவு தான் பெய்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர வில்லை.
அப்பர்பவானி அணையின் மொத்த நீர்மட்டம் 210 அடி. ஆனால் தற்போது அணையில் 118 அடி தான் தண்ணீர் உள்ளது. இதற்கு அணைக்கு போதிய அளவு நீர் வரத்து இல்லாததே காரணம் ஆகும். இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் அப்பர்பவானி அணையில் மின்உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story