தூத்துக்குடி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.7.68 கோடிக்கு மது விற்பனை
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.7 கோடியே 68 லட்சத்துக்கு மதுவிற்பனை நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.7 கோடியே 68 லட்சத்துக்கு மதுவிற்பனை நடந்தது.
மது விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 106 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி கூட்டம் அலைமோதியது. கடந்த 13, 14-ந்தேதிகளில் மதுவிற்பனை உச்சகட்டத்தை எட்டியது. கடந்த ஆண்டு போகி பண்டிகையான 13-ந்தேதி ரூ.2 கோடியே 34 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 62 லட்சத்துக்கு மதுபானம் விற்பனை நடந்து உள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான 14-ந்தேதி ரூ.4 கோடியே 73 லட்சத்துக்கு மதுவிற்பனை நடந்தது. இதில் பீர் 2 ஆயிரத்து 600 பெட்டிகளும், ரம், விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மதுவகைகள் 8 ஆயிரத்து 700 பெட்டிகளும் விற்பனையானது.
அதிகரிப்பு
இந்த ஆண்டு ரூ.5 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்துக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது. இதில் பீர் 2 ஆயிரத்து 800 பெட்டிகளும், மற்ற மதுவகைகள் 8 ஆயிரத்து 500 பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மதுபாட்டில்கள் விற்பனை குறைந்தாலும், மது விற்பனை தொகை அதிகரித்து உள்ளது. மதுவகைகளின் விலை உயர்வால் விற்பனை தொகை அதிகரித்து உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.

Related Tags :
Next Story