பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் முறுக்கு வியாபாரிக்கு கத்திக்குத்து 4 பேர் கைது


பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் முறுக்கு வியாபாரிக்கு கத்திக்குத்து 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் முறுக்கு வியாபாரி கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

துறையூர்,

பொங்கல் விழாவை முன்னிட்டு துறையூரில் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல துறையூரில் உள்ள முத்து நகரில் பொங்கல் விழா நடைபெற்றது அப்போது அதே பகுதியில் வசித்துவரும் முறுக்கு வியாபாரி வினோத்(வயது28) என்பவர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசி நாளான நேற்று குழந்தைகளின் நடன நிகழச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முத்து நகர் பக்கத்து தெருவில் வசிக்கும் சில வாலிபர்கள் நடன நிகழ்ச்சியின் போது கூச்சல் போட்டதாக கூறப்படுகிறது. அவர்களை விழாகுழுவினர் பல முறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது அவர்களை வினோத் கண்டித்தார். இதில் வினோத்துக்கும், வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கத்திக்குத்து

அந்த வாலிபர்களில் பெரியசாமி(19) என்பவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வினோத்தை குத்தினார். இதில் வினோத்துக்கு தோல்்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, அவரது நண்பர்கள் துறையூரை சேர்ந்த சபரிநாதன்(23), ஜீவா(19), விஜய்(19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

Next Story