மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Jan 2018 4:00 AM IST (Updated: 18 Jan 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடைய சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. எடப்பாடி நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேகர், நிர்வாகிகள் நாராயணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

செட்டிமாங்குறிச்சியில் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேரூராட்சி செயலாளர் ஜெயராமன், முன்னாள் பேரவை செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொங்கணாபுரம் ரவுண்டானாவில் ஒன்றிய பேரூர் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் கரட்டூர் மணி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பேரூராட்சி செயலாளர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் ராஜா, ஜிந்தா, அவைத்தலைவர் ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவிற்கு தங்கவேலு தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

சங்ககிரியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் என்.சி.ஆர். ரத்தினம் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் நீதிதேவன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சேகர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னசாமி, கிளை செயலாளர்கள் குப்பன், பொன்னாமலை, செங்காளிகாடு சண்முகம், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓமலூரை அடுத்த வேலகவுண்டனூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பழனி ஆண்டவர் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. சிவபெருமான், ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் மல்லிகா, கூட்டுறவு சங்க தலைவர் தளபதி, நகர செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காடையாம்பட்டியில் ஒன்றிய நகர அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சித்தேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராணிசேகர், ஒன்றிய பேரவை செயலாளர் சுப்பிர மணியம், மாவட்ட மருத்துவஅணி செயலாளர் சுந்தரராஜன், ஒன்றிய துணை செயலாளர் அன்பு, பொருளாளர் வெங்கடேசன், பேரவை துணை செயலாளர் மகாராஜன் உள்பட பலர் பலந்துகொண்டனர்.

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னதம்பி ஆகியோர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் செல்வம், வேலாயுதம், முன்னாள் பேரூராட்சி சேர்மன் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சின்னதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், ஏத்தாப்பூர் பேரூர் செயலர் ராஜமாணிக்கம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அப்பாவு, செல்வம், மஸ்தான், குப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பனமரத்துப்பட்டியில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நகர செயலாளர் சின்னதம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்பு வழங்கினார்.

இந்த விழாவில் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலசந்திரன், நகர அவைத்தலைவர் குமரேசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் மணிகண்டன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பொன்னுசாமி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் யூசுப், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story