நர்சிங் மாணவி கடத்தல்; 4 பேர் மீது வழக்கு


நர்சிங் மாணவி கடத்தல்; 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே நர்சிங் மாணவி கடத்தல்; 4 பேர் மீது வழக்கு

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே வடலிவிளையை சேர்ந்த 17-வயதுடைய மாணவி ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சமீபத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 26), லட்சுமி (44), சுதாகர் (31), கலா (49) ஆகியோர் காரில் வந்து மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் மாணவியை கடத்தி சென்றதாக ரமேஷ் உள்பட 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகிறார்கள். 

Next Story