101-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு


101-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 2018-01-18T02:24:39+05:30)

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி தஞ்சையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர், டி.டி.வி.தினகரன் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று மாலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க.வினர் தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் இருந்து பரசுராமன் எம்.பி. தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம், காந்திசாலை வழியாக ரெயிலடியை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன், ரமேஷ், கரந்தை திராவிட கூட்டுறவு வங்கி தலைவர் பஞ்சு, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங்.ஜெகதீசன், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள் சண்முகபிரபு, என்.கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலையில் இருந்து டி.டி.வி.தினகரன் அணியினர் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணசாலை, காந்திசாலை வழியாக தஞ்சை ரெயிலடியை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேஸ்வரன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேலன், மனோகரன், பகுதி செயலாளர்கள் விருத்தாசலம், ஜின்னா, தொழிற்சங்க நிர்வாகி வேங்கை கணேசன், வட்ட செயலாளர்கள் அய்யாவு, ராஜா, முன்னாள் மாநகராட்சி துணை மேயர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் எம்.பி.எஸ்.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை சந்திப்பில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சுப்பு, நகர செயலாளர் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பூதலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தோகூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பூதலூர் ஒன்றிய செயலாளர் ரெத்தினசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல தோகூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு டி.டி.வி. தினகரன் அணியின் சார்பில் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.க.சுப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர். தொடர்ந்து பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டி சாலை சந்திப்பில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

Next Story